செய்தி தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட முயன்ற நான்கு பேர் கைது

கோவை – 29-03-23

கிணத்துக்கடவு

வழிப்பறியில் ஈடுபட முயன்ற நான்கு பேர் கைது

கோவை கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது ஆர்.எஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் சந்தேகப்படும் படி நான்கு பேர் நின்று இருந்தனர். அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய் தூள் இருந்தது.

தொடர்ந்து 4 பேரையும் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் காவல் நிலையத்திற்கு  அழைத்து வந்தனர்.

இதை அடுத்து நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அருணாச்சலம்,  முருகன், முத்துப்பாண்டி தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்  என்பது தெரியவந்தது.

மேலும் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் நபர்களிடம் வழிப்பறி ஈடுபட தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறிப்பாக முருகன் சுந்தர்ராஜ் மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல்  நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!