மேற்கு அவுஸ்ரேலியாவை தாக்கவுள்ள பெரும் சூறாவளி!
மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது கடுமையான சேதங்கள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ள category 4 இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)