முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வெளியே பாயத் தொடங்கியுள்ளது, இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாகமுல்லைத்தீவு மாவட்டம் – பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் பாதிப்பு (குடும்பங்கள் மற்றும் நபர்கள்)
| பிரதேச செயலாளர் பிரிவு (DS Division) | பாதிக்கப்பட்ட குடும்பங்கள் (Families) | பாதிக்கப்பட்ட நபர்கள் (Persons) |
| புதுக்குடியிருப்பு | 582 | 1,826 |
| ஒட்டுசுட்டான் | 372 | 1,078 |
| மாந்தை கிழக்கு | 315 | 930 |
| வெலிஓயா | 129 | 331 |
| கரைத்துரைப்பற்று | 125 | 362 |
| துணுக்காய் | 27 | 65 |
| மொத்தம் | 1,550 | 4,592 |
பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (30) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 42, இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




