மலேசியாவில் அதிரடி சுற்றிவளைப்பு – மீட்கப்பட்ட 402 சிறார்கள் – நூற்று கணக்கானோர் கைது
மலேசியாவில் 20 பராமரிப்பு இல்லங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பாதிப்பிற்குள்ளான 402 சிறார்களை மலேசிய பொலிஸார் மீட்டுள்ளன.
இந்தச் சுற்றிவளைப்பில் இந்த துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 171 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 66 பேர் ஆண்கள் மற்றும் 105 பேர் பெண்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 402 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 1 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் 201 சிறுவர்களும் 201 சிறுமிகளும் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் பதிவாகிய சிறுவர் துஷ்பிரயோகம், துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் உடல்நிலை மோசமடையும் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை மற்றும் சில குழந்தைகள் உடல் ரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.