செய்தி தமிழ்நாடு

பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் தலைவராக நீடிப்பாரா…

சென்னை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மனிதனேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

தலைமையில் நடைபெற்றது,அப்துல் சமது எம்.எல்.ஏ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்,

ஜவாஹிருல்லா பேட்டி

ஒன்றிய பாஜக அரசு சமூகநீதியை குழிதோண்டி புதைக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது அதன் முதல் கட்டமாக முற்படுத்த வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஒரு அறிவிப்பை செய்தது

இதன் மூலமாக அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் குறிப்பிட்ட முற்பட்ட வகுப்பினர் மற்றும் முக்கியமான இடங்களை பெறக்கூடிய நிலை ஏற்படுகிறது.

தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை  முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட நான்கு சதவீத கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு ரத்து செய்து சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

சமூக நீதிக்கு எதிரானது பாஜக என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது இவற்றை யெல்லாம் கவனத்தில் கொண்டு தான் சமூக நீதியை பாதுகாக்க கூடிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.

சமூக நீதிக்கு முதன் முதலில் குரல் கொடுத்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது இந்த நிலையில் தான் வருகிற மே மாதம் 21-ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மறைமலை நகரில்சென்னை மண்டலம் சார்பில்

சமூகநீதி பாதுகாப்பு மாநாடு நடத்துகின்றோம் இந்த மாநாட்டில் சமூக நீதியில் அக்கறை கொண்ட தமிழகத்தில் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

சமூக நீதி மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் பாஜக செயல்பட்டு வருகிறது இதன் எடுத்துக்காட்டாக தான் ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப் பட்டுள்ளது அவதூறு பேசினார்

என்ற வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டு அதே நீதிமன்றத்தில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு அவருக்கு மேல் முறையீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தியிடம் இருந்து பறித்தது பாஜகவினரின் கோழைத்தனமான செயலாக உள்ளது, ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை பயணம் நடத்தினார்

இந்தப் பயணம் அனைத்து மாநிலங்களிலும் ஒரு எழுச்சி ஏற்படுத்தி பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை தூங்கா இரவுகளை கொடுத்திருக்கிறது.

ராகுல் காந்தியினுடைய பதவி பறிப்பு என்பது பாஜக தலைவர்கள் விரக்தி உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது அதானி ஊழலை மிக திறமையாக சரியான முறையில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தோலுரித்துக் காட்டினார்,

அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இருக்கிற உறவுகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க திராணியில்லாத பாஜக ராகுல் காந்தியை பார்த்து குலை நடுங்கியிருக்கிறது அதன் வெளிப்பாடாகத்தான் ராகுல் காந்தி பதவி பறிப்பு அமைந்திருக்கிறது.

இது ஜனநாயகத்திற்கு நம்முடைய நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலாக இருக்கிறது இந்த சவாலை முறியடிக்க கூடிய வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கின்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை தனிமை படுத்த வேண்டும்

ஓரணியில் திரண்டு இதற்காக போராட வேண்டும் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நுழையும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும் இத்தகைய போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சியியுப் நிச்சயமாக பங்கெடுக்கும்.

தமிழகத்தில் நீண்ட காலமாக சிறைவாசிகளாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்வதற்கு ஆதிநாதன் குழு பரிந்துரை ஏற்று ஆளுநர் ஒப்புதலுக்கு அளிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை வாய் வீச்சில் வல்லவர் அது தவிர வேறு ஒன்றும் இல்லை கட்சியில் அவர் தலைவராக நீடிப்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ள சூழ்நிலையில் அவர் வெளியிடக்கூடிய பட்டியலை எதிர் கொள்ள கூடிய திராணி திமுக அரசிற்கு உள்ளது என இவ்வாறு கூறினார்.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி