தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்கி சீனாவை உசுப்பேற்றும் அமெரிக்கா!
தாய்வானுக்கான ஆயுத விற்பனை தொடர வேண்டும் என அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சாய் நியூயோர்க்கில் தலைமைத்துவ விருதுடன் கௌரவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று (புதன்கிழமை) கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் மற்றும் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி இடையேயான சந்திப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்துக்கு உறுதியான பதிலடி என்று உறுதியளித்த சீனா சுயராஜ்ய தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)