சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கவில்லை
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறிய போது அமைச்சரவையில் இருந்து எழுந்து சென்ற அமைச்சர்கள் இருக்கும் நாடு இது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று நாம் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடுகின்றோம். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற ஜனாதிபதி ஒருவர் இன்று இலங்கையின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் பொருளாதாரப் பிரச்சினை பற்றி கலந்துரையாடுகிறார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கி வட்டியை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை நாம் அறிவோம்.
இதனால் கீழ்மட்ட மக்கள் மட்டுமின்றி நடுத்தரவகுப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. எனவே, சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கவில்லை.
இருபது வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி இதனைப் பற்றிப் பேசினார். நாங்கள் அன்று இதற்கு எதிரான தரப்பில் இருந்தோம்.
அன்று எங்கள் பக்கம் மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த முடிவுகள் தவறானவை என்பதை இப்போது நாம் அறிவோம். நீங்கள் பொருளாதார நிபுணர்கள்.
18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல மாட்டோம் என ஜனாதிபதி தற்போது கூறினார். அந்தப் பொறுப்புக்காக அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட வேண்டும். அதற்கு உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.