கழுத்தைப் பாதுகாப்பது எப்படி? – நிபுணர்கள் வழங்கும் 5 முக்கிய வழிமுறைகள்
கழுத்து வலி என்பது வெறும் தசைப்பிடிப்பு மட்டுமல்ல, அது உங்கள் உடல் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல் என்று சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி விரிவுரையாளர் டாக்டர் பூனம் மேத்தா குறிப்பிடுகிறார்.
1. மைக்ரோ பிரேக் (Micro Breaks) எடுங்கள்
தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு 30 முதல் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து 60-90 விநாடிகள் நில்லுங்கள்.
நிற்கும்போது தோள்பட்டைகளை பின்னோக்கி சுழற்றி (Shoulder rolls) ஆழமாக சுவாசியுங்கள். இது உங்கள் தண்டுவடத்தை ‘Reset’ செய்ய உதவும்.
2.நீங்கள் உபயோகப்படுத்தும் சாதனங்களை உங்கள் பார்வைக்குக் கிட்டவாக கொண்டு வாருங்கள் (Bring the Device to You)
நமது கழுத்து முன்னோக்கி குனியும்போது, அதன் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.
மொபைலை குனிந்து பார்க்காமல், கண்களுக்கு நேராக உயர்த்திப் பிடியுங்கள்.
மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் Laptop Riser அல்லது ஸ்டாண்ட் பயன்படுத்தி திரையை கண் மட்டத்திற்கு (Eye level) உயர்த்தி வையுங்கள்.
3. ‘போ அண்ட் ஆரோ’ (Bow and Arrow) பயிற்சி
கழுத்து நெகிழ்வுத்தன்மைக்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய பயிற்சி:
கைகளை முன்னால் நீட்டி உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வில்லை நாண் ஏற்றி இழுப்பது போல ஒரு கையை மட்டும் பின்னோக்கி இழுங்கள்.
உங்கள் தலை மற்றும் பார்வை அந்த முழங்கையைப் பின்தொடர வேண்டும். இது கழுத்து மற்றும் முதுகுத் தசைகளை மென்மையாகத் தூண்டும்.
4. வலியைப் புறக்கணிக்காதீர்கள் (Listen to Signals)
கழுத்தில் இறுக்கம் அல்லது லேசான அசௌகரியம் தெரிந்தால், உடனே வேலையை மாற்றுங்கள்.
ஒரு மணிநேரம் டைப்பிங் செய்திருந்தால், அடுத்த சில நிமிடங்கள் திரையைப் பார்க்காத வேலைகளில் (உதாரணமாக: போன் பேசுவது அல்லது தண்ணீர் குடிப்பது) ஈடுபடுங்கள்.
5. பாதுகாப்பற்ற முறைகளைத் தவிர்க்கவும்
கழுத்தை சொடுக்காதீர்கள்: கழுத்தை ‘மடக்’ என சொடுக்குவது தற்காலிகமாக நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், அது மூட்டுகளுக்கு ஆபத்தானது.
தூங்கும் போது கழுத்து மற்றும் முதுகு ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி உயரமான அல்லது மிகவும் தட்டையான தலையணைகளைத் தவிர்த்து சரியான உயரத்தைத் தேர்வு செய்யவும்.





