கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்
மேற்குக் கனடாவில் ஒருவரைக் கத்தியால் மிரட்டி மற்றொருவரின் கழுத்தை அறுத்துப் படுகாயம் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அப்துல் அஸீஸ் கவாம் (Abdul Aziz Kawam) எனும் அந்த ஆடவர் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றார்.
IS பயங்கரவாதக் கும்பலின் பெயரைச் சொல்லிக் கொலைசெய்ய முயன்றதும் அவற்றில் ஒன்று எனக் கனடிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
சர்ரே (Surrey) நகருக்கு அருகே கவாம், பேருந்து நிறுத்துமிடத்தில் ஆடவர் ஒருவரைக் கத்தியால் மிரட்டியதாகவும் எனினும் அவரைத் தள்ளிவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு அங்கிருந்து தப்பியதாகவும் காவல்துறை AFPயிடம் தெரிவித்தது.
அதன்பிறகு ஒரு பேருந்தில் ஏறிய கவாம் மற்றோர் நபருடன் தகராறு செய்ததாகவும் அப்போது அந்த ஆடவரின் கழுத்து அறுக்கப்பட்டு அவர் படுகாயமடைந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த ஆடவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் குணமடைந்து வருகிறார்.
விசாரணையின்போது கவனத்தில் கொள்ளக்கூடிய சில கருத்துகளைக் கவாம் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
அண்மை ஆண்டுகளாகக் கனடாவில் நிகழ்ந்துவரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.