செய்தி தமிழ்நாடு

கண்களை குளிரவைத்து தெப்பத்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது 11 நாட்கள் நடைபெறும்

இவ்விழாவில் நேற்றைய தினம் இரவு தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்தபடி கந்த பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பக்தர்கள் அரோகரா என கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்,

பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!