ஏற்றும் போது கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக MLA(வீடியோ)
கொடியேற்றும் போது, தேசியக்கொடி கீழே அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை அடிக்க கை ஓங்கிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
75வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக்கொடி ஏற்றினர்.மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டார்.
பாரத கொடியை கூட உருப்படியாக ஏற்ற தெரியாத கும்பகோணம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்.
Absolute shame #DMK MLA Mr.@GAnbalagan_ ! pic.twitter.com/aLLG3LPA9L
— Dr.SG Suryah (@SuryahSG) August 15, 2023
அங்கு, கும்பகோணம் 8-வது பட்டாலியன் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் எஸ்.சந்திரசேகரன் மற்றும் திமுக எம்.எல்.ஏ இருவரும் இணைந்து கொடி ஏற்ற முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தேசியக்கொடி அறுந்து விழுந்தது.
இதனைத்தொடர்ந்து, தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை பார்த்து திமுக MLA சாக்கோட்டை அன்பழகன் கை ஓங்கினார்.இதனால் அருகில் இருந்தவர்கள் தேசியக்கொடியை மீண்டும் கயிற்றில் கட்டி ஏற்றினர். தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.