இளவரசர் ஹரி – மேகனை பதவியில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்படும் சட்டமூலம்
ஹரி மற்றும் மேகன் மார்கல் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் அரச குடும்பத்தை இனவெறி கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியதாகவும், அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிறைய விமர்சனங்கள் வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஓமிட் ஸ்கோபியின் சமீபத்திய புத்தகமான ‘எண்ட் கேம்’ குறித்து கருத்து தெரிவிக்கும் போது ஹரி மற்றும் மேகன் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.