இலங்கை செய்தி

இந்தியாவில் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்!

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்றையதினம் அறுவடை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்றையதினம் வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான பயறு விதைக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். இந்திய துணை தூதரகத்தால் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொஸ்தா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேற்குறித்த நெல்லினங்கள் முதல் தடவையாக இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!