அவுஸ்ரேலியாவில் பணவீக்கம் அதிகரிப்பு : உயரும் வட்டி வீதம்!
அவுஸ்ரேலிய மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு மற்றொரு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று முதல் வட்டி விகிதம் 3.6 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது கடந்த 11 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட மிக உயரிய வட்டி விகிதம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுனர் பிலிப் லோவ் மேலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய வளர்ச்சி மற்றும் மென்மையான தேவை ஆகிய இரு காரணிகளும் வரும் நாட்களில் பணவீக்கம் மிதமான நிலையில் இருப்பதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் பணவீக்க பிரச்சினை உலகளாவியது என்றும், அரை மில்லியன் டாலர் அடகு வைத்திருக்கும் ஒருவர் சமீபத்திய கடன் உயர்வுகளுக்கு பிறகு 1000 அவுஸ்ரேலிய டொலர்களை கூடுதலாக செலுத்துவார் எனத் தெரிவித்தார்.