செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா

கோவை அருகே உள்ள ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் முதல்வர் ரேணுகா வரவேற்று பேசினார்.

விழாவுக்கு ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் சேர்மன் பெரியசாமி தலைமை தாங்கினார்.

விழாக்கு இயக்குனர் டாக்டர் குந்தவிதேவி முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை குணியமுத்தூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீஅபிராமி கல்வி குழுமங்களை பற்றி கேள்விபட்டுள்ளேன்.

இங்கு மிக சிறப்பான உள்கட்டமைப்பு வசதி உள்ளது என்றும், சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்குவதில் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் கேள்விபட்டு உள்ளேன்.

இங்கு பயிலும் மாணவ செல்வங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முடித்து நல்ல உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். முன்னதாக விழாவில் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் உமாதேவி, டாக்டர் பாலமுருகன் டாக்டர் அரவிந்த், டாக்டர் ஜெயபாரதி டாக்டர் நரேஸ் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி