செய்தி

“வீதியோர வியாபாரிகளை தடைசெய்” திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!!

#Trincomalee #Protest #StreetVendors #Trinco #LKA #TamilNews #திருகோணமலை

வீதியோர வியாபாரிகளை தடைசெய்” என கோரிக்கை விடுத்து திருகோணமலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) முன்னெடுக்கப்பட்டது.

#Trincomalee #Protest #StreetVendors #SriLankaNews #TrincomaleeProtest #Trinco #LocalBusiness #TamilNews #BreakingNews #திருகோணமலை #ஆர்ப்பாட்டம் #வீதியோரவியாபாரிகள்

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாநகரசபையின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது “வீதியோர வியாபாரிகளை தடைசெய்”, “வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து” உள்ளுர் வர்த்தகம் உள்ளுர் வளர்ச்சி” “தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

#Trincomalee #Protest #StreetVendors #SriLankaNews #TrincomaleeProtest #Trinco #LocalBusiness #TamilNews #BreakingNews #திருகோணமலை #ஆர்ப்பாட்டம் #வீதியோரவியாபாரிகள்

பின்னர் மாநகசபையின் முதல்வருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வர்த்தக சங்க குழுவினர் சிலர் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

#Trincomalee #Protest #StreetVendors #SriLankaNews #TrincomaleeProtest #Trinco #LocalBusiness #TamilNews #BreakingNews #திருகோணமலை #ஆர்ப்பாட்டம் #வீதியோரவியாபாரிகள்

இதன் பின்னர் கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், தற்போது குறித்த நிறுவனங்களிடம் கட்டணங்கள் பெறப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் அனுமதியை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் வர்த்தக சங்கத்தை பாதிக்காத வகையில் அனுமதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சாதகமான முறையில் மாநகரசபையின் முதல்வர் பதில் வழங்கியதாகவும் அதேபோன்று நகரசபையின் வருமானம், பணிபுரிகின்ற ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்ததாகவும் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் தெரிவித்தார்.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!