இலங்கை செய்தி

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்ட அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வெளியே பாயத் தொடங்கியுள்ளது, இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாகமுல்லைத்தீவு மாவட்டம் – பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் பாதிப்பு (குடும்பங்கள் மற்றும் நபர்கள்)

பிரதேச செயலாளர் பிரிவு (DS Division) பாதிக்கப்பட்ட குடும்பங்கள் (Families) பாதிக்கப்பட்ட நபர்கள் (Persons)
புதுக்குடியிருப்பு 582 1,826
ஒட்டுசுட்டான் 372 1,078
மாந்தை கிழக்கு 315 930
வெலிஓயா 129 331
கரைத்துரைப்பற்று 125 362
துணுக்காய் 27 65
மொத்தம் 1,550 4,592

பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (30) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 42, இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!