மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகம் : டிரானிற்கு அழை
கொழும்பு களனி பல்கலைகழகங்களிற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களி;ல் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இந்த விசாரணைகளிற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெசினை 13 ம் திகதி விசாரணைகளிற்காக ஆஜராகுமாறு மனித உரிமை ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதே வேளை குறித்த ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை அவர்களது பதவி நிலையுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இத்தகைய நடவடிக்கையை நிறுத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.