செய்தி தமிழ்நாடு

மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்

கோவை அரசு கலை கல்லூரியில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு  நடைபெற்றது.

இக்கண்காட்சி கருத்தரங்கை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார் இதன் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பேராசிரியர்களுடன்‌ பார்வையிட்டார்.‌ இதை தொடர்ந்து மாணவர்களாடையே உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,

சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள கல்லூரியில் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்‌ என பெருமிதம் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என்ன வேலைவாய்ப்பு கல்லூரி மாணவர்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இக்கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்கள்‌ தங்களது பலம் என்பதை கண்டறிய வேண்டும்‌ என்றும்  தாங்கள் செய்யக்கூடிய பணியில் சிறப்பானவராக விளங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.‌

5 வருடத்தில் நான் தமிழ் கற்றுக்கொண்டேன். புதிதாக என்ன கற்றுக்கொண்டால் முன்னோக்கி செல்ல முடியும் என்பதில் மாணவர்கள் தெளிவடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து தினக்கூலிக்கு வந்த பலர் கோவை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலாளிகளால் உயர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

நான்காவது வரை படித்த ஜி.டி. நாயுடு புதிய கண்டுபிடிப்புகளையும் தொழிற்துறை சிந்தனையையும் கோவை மாவட்டத்திற்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

 

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி