ஐரோப்பா செய்தி

மன்னர் சார்லஸுக்கு எழுதிய கடிதம் குறித்து மனம் திறந்து பேசினார் மேகன்

ஹாரி – மேகன் யார் என்பதை நாங்கள் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சமீப நாட்களாக இவர்கள் இருவரும் பல பிரச்சனைகளால் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

தன்னை விட வயதில் மூத்த மேகனை திருமணம் செய்து கொண்ட இளவரசர் ஹாரி, உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

இந்த ஜோடி அமெரிக்கா சென்று பின்னர் பெற்றோரான செய்தி உங்களுக்கு புதிதல்ல. சமீபத்தில் வெளியான ஹாரியின் சுயசரிதை புத்தகமும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

குறிப்பாக, அரச குடும்ப உறுப்பினர்கள் ஹாரியின் சில தகவல்களை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், மே 6-ம் திகதி பிரிட்டனில் நடக்கவிருக்கும் ஒரு வித்தியாசமான நிகழ்வு குறித்து உலகமே பேசுகிறது.

அன்றுதான் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற உள்ளது.

டெய்லி மெயில் இணையதளம், மேகன் இந்த விடயம் குறித்து கவலைப்பட்டதாக தெரிவிக்கிறது.

தனது கடிதங்களுக்கு பதிலளிக்காமல் மன்னர் சார்லஸ் தன்னை புறக்கணிப்பது தனது சுயமரியாதையையும் புண்படுத்துவதாக மேகன் கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரம் குறித்து தான் கவலைப்பட்டு வருவதாகவும், அதனால் அவதிப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், இவர்கள் இருவரும் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி தனித்தனியாக பொழுதைக் கழிப்பதால், முடிசூட்டு விழாவிற்கு வருவதும் நிச்சயமற்றதாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!