மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டது
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியச் சட்டத்தின் மீதான சமூக அமைதியின்மை நாடு முழுவதும் வரலாறு காணாத மோசமான வன்முறையாக வெடித்துள்ளதை அடுத்து, பிரிட்டனின் மன்னர் சார்லஸ் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சுக்கான அரசு பயணத்தை ரத்து செய்துள்ளார்.
பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மோசமான உறவுகளுக்குப் பின்னர் இரு நாடுகளும் ஒரு இணக்கப்பாட்டிற்கு திருப்புவதற்கான முயற்சிகளில் மன்னரின் வருகை ஒரு அடையாளப் படியைக் குறிக்கும் என்று நம்பியிருந்த மக்ரோனுக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
ஜேர்மனிக்கு தனது விஜயத்தை முன்னெடுக்க முன் சார்லஸ் மூன்று நாட்கள் விஜயமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்சுக்குப் பயணம் செய்யவிருந்தார்.
இது ஐரோப்பாவின் உண்மையான தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்ற பிரான்ஸ் தலைவரின் வெற்றியாகக் கருதப்பட்டது.
எனினும் பிரான்ஸில் நிலைமைகள் மோசமடைந்துள்ள நிலையில் இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.