மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்
க்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அக்கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழு என்பது 18 சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் ஓர் கட்டமைப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பதைக் கண்காணிப்பதும், மீளாய்வு செய்வதுமே இக்கட்டமைப்பின் பிரதான பணிகளாகும்.