பொண்டி துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கண்டனம்
அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் , இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என ஜனாதிபதி மேலும் கூறினார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 24 வயதான நவீத் அக்ரம் என பெயரிடப்பட்ட மற்றொரு துப்பாக்கிதாரி ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
துப்பாக்கிதாரிகள் தந்தை மற்றும் மகன் என்பதை பொலிஸார் முன்னதாகவே உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.





