செய்தி தமிழ்நாடு

பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தின விழாவில் கலந்து கொண்ட அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள்  துணை வேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்..

கோவை கே.சி.டபிள்யூ. கல்லூரியில் 2023 கல்வி ஆண்டு கல்லூரி தின விழா நடைபெற்றது.கல்லூரி நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி செயலர் முனைவர் யசோதா முன்னிலை வகித்தார்.

முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சாதனை மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள்  துணை வேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,கிருஷ்ணம்மாள் கல்லூரியின் பல்வேறு சாதனைகளை பட்டியிலிட்டு கூறிய அவர்,

இந்த கல்லூரி பெண் கல்வியை போற்றும் விதமாகவே துவங்கப்பட்டதாக கூறிய அவர்,ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.நல்ல சமுதாயத்தை உருவாக்கிடவும் பெண் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்திய அவர்,

கற்பதை கல்லூரியோடு நிறுத்தாமல் தொடர்ந்து கற்று கொண்டே இருப்பது அவசியம் என்றார்.தொடர்ந்து விழாவில் பல்வேறு துறைகளில்  சிறந்த கல்லூரி மாணவியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியைகள் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

 

(Visited 10 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி