செய்தி தமிழ்நாடு

பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்றார்

கோவை 11-04-23 செய்தியாளர் சீனிவாசன்

பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி ஆசிரியர் பயிற்சி  முடித்துள்ளார். இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இந்நிறுவனத்தின்  உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்து மீறி பேசுவது,என வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்துள்ளார்.

மேலும்  போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான காயத்ரி,நிறுவன உரிமையாளரை கண்டித்துள்ளார்.இந்நிலையில்  கடந்த 22 ஆம் தேதி  உரிமையாளர்  காயத்ரியை அலுவலகத்தில் வைத்து  அடிக்க முற்பட்டுள்ளார்.

ஐந்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்கு வந்தால் 500 ரூபாய் அபராதம் எனவும் கூறி அபராதம் விதித்து உள்ளார் இவரின் நடவடிக்கை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் காயத்ரி பீளமேடு காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் மனுவை எழுதி கொடுத்தார் புகாரின் பேரில் பீளமேடு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலகத்தில் சண்டை போட்டு கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி