புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை!
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டமூலம் இயற்றபட்டதில் இருந்தே பல்வேறு கேள்விகளையும், கவலைகளையும் எழுப்பியிருந்தது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட உள்ளூர் சர்வதேச அமைப்புகள் இரண்டும் இலங்கை அதிகாரிகளை சட்டப்பூர்வ கருந்துளை எனக் கருதி இந்தச் சட்டத்தை நீக்குமாறு பலமுறை வலியுறுத்தின.
விடுதலைப்புலிகளுடனான மோதலின்போது ஒரு தற்காலிக நடைமுறையாக கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்தை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த சட்டமூலத்தை நீக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.