ஆசியா செய்தி

பீஜிங்கில் பொழிந்த புழுமழை; வைரலான வீடியோ..!

நம்மில் பலரும் பருவமழை, கனமழை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். பணமழை பொழிந்தது என்று கூட செய்தியில் படித்து இருப்போம். ஆனால், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.

அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் போன்ற உயிரினம் படர்ந்து காணப்படுகிறது. அதனால், வானில் இருந்து புழுக்கள் ஏதும் நம் மீது விழுந்து விட கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே பாதுகாப்பாக செல்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இதற்கான காரணம் என்னவென இதுவரை தெரியாதபோதும், பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு இவை இந்த பகுதியில் மேலிருந்து கீழே போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை தெரிவிக்கின்றது.

ஒரு சூறாவளியில் இந்த பூச்சிகள் சிக்கும்போது இதுபோன்று நடக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளது என நியூயார்க் போஸ்ட் தெரிவித்து உள்ளது. எனினும், சீன பத்திரிகையாளரான ஷென் ஷிவெய், வீடியோ போலியானது. நான் பீஜிங் நகரிலேயே இருக்கிறேன். சமீப நாட்களாக பீஜிங்கில் மழைப்பொழிவே இல்லை என தெரிவித்து உள்ளார்.

 

புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும் வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர், அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளிப்பூச்சிகள் என்றும் கூறுகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி