பிரித்தானியாவில் சிரிப்பு வாயுவை தடைசெய்ய நடவடிக்கை!
பிரித்தானியாவில் சமூகவிரோத நடத்தைகளை கட்டுப்படுத்தும் அரசின் திட்டங்களின் கீழ் நைட்ரஸ் ஆக்சைட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை இன்று லெவலிங் அப் செயலர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், எங்கள் முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்களில் நடக்க வாய்ப்புள்ள எவரும் இந்த சிறிய வெள்ளி குப்பிகளை பார்த்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.
அவை பொது இடங்களை கெடுப்பது மட்டுமல்ல, போதைப்பொருள் உட்கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாகும். இது ஒரு உளவியல் மற்றும் நரம்பியல் விளைவைக் கொண்டிருக்கலாம் .மற்றும் ஒட்டுமொத்த சமூக விரோத நடத்தைக்கு பங்களிக்கும் எனக் கூறினார்.
நைட்ரஸ் ஆக்சைடு பொதுவாக சிரிப்பு வாயு என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில் கஞ்சாவிற்குப் பிறகு பயன்படுத்தப்படுகிற இரண்டாவது மருந்தாக காணப்படுகிறது.