ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் NHS ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: நீண்ட போராட்டத்திற்குப் பின் கிடைத்த வெற்றி!

பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த சில தினங்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையிலுள்ள மற்ற ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் புதிதாக ஊதிய உயர்வைக் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் அரசாங்கத்திடமிருந்து புதிய ஓய்வூதியத்திற்கான பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளன. பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் நிர்வாகமும், NHS பணியாளர் கவுன்சிலும் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை முடித்து, டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது.

தொழிற்சங்க முதலாளிகளுடன் கடந்த வியாழனன்று சுகாதார துறை அமைச்சர் ஸ்டீவ் பார்க்லேயுடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர், இந்த ஆண்டுக்கான கூடுதல் ஊதியம் மற்றும் 2023-2024க்கான அதிக விகிதம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.2023-2024 ஆம் ஆண்டிற்கான 5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் இந்த ஆண்டுக்கான கூடுதல் ஆண்டுத் தொகை ஆகியவை வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தகுதி பெற்ற செவிலியர், தற்போதுள்ள ஒப்பந்தத்தின் மேல் இந்த ஆண்டு கூடுதலாக £1,800 மற்றும் அடுத்த ஆண்டு £1,300 க்கும் அதிகமான ஊதிய உயர்வைப் பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது.கொரானா காலம் முழுதும் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் காட்டிய எங்கள் கடின உழைப்பாளிகளான NHS ஊழியர்களுக்கு நாங்கள் வெகுமதி அளிப்பது சரியானது, மேலும் காத்திருப்புப் பட்டியலைச் சமாளிப்பதில் தொடர்ந்து அற்புதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!