பிரான்ஸில் இறுக்கமாகும் சட்டம் – பலர் பாதிக்கப்பட வாய்ப்பு

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான சமூகநலக்கொடுப்பனவுகள் வழங்குவதில் மிக இறுக்கமான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் படி, ஒருவர் பணியிடத்தில் இருந்து அறிவித்தலின்றி விலகினால், அவர் அடுத்த இரு வாரங்களுக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டவராக கருதப்படுவார்.
அப்படி வேலையில் இருந்து நீக்கப்படுபவர்களுக்கு வேலை தேடுவோர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையான சமூகநலக் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களின் பின்னர் வேலையில் இருந்து நீக்கப்பட்டவராக கருத்தப்படும் ஒருவர், அதற்குரிய நியாயப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் வேலைக்குச் சேர முடியும்.
(Visited 48 times, 1 visits today)