பதுளை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலனிலை காரணமாக பதுளை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பல வீதிகளின் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று காலை மண்சரிவினால்அப்புத்தளை எட்டம்பிட்டிய,பண்டாரவளை விதி பதுளை கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளை பண்டாரவளைக்கு இடையில் கோணமுட்டவ பகுதியின் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மற்றும் மொணராகல கும்பகன்ன பாடசாலை முற்றாக நீரில் முழ்கப்பட்டுள்ளது. மலையக தொடருந்து பாதையும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தை பொருத்தவரையில் பல பிரதேசங்கள் மழையினால் மண்சரிவு காரணமாக பாதிக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பல குடும்பங்களை தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.




