ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 2026 இன் இதுவரையான காலப்பகுதியில் மிகவும் வெப்பமான நாள் இன்று

பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பநிலை 20 பாகை செல்ஸியஸ் இற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மிகவும் வெப்பமான நாளாக இன்றை தினம் அமையலாம் என்றும்
வானிலை மையம் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில், இந்த ஆண்டின் இதுவரையிலான மிகவும் வெப்பமான நாள் செவ்வாய்க்கிழமை பதிவானது.

மோரே கடற்கரையில் உள்ள லாஸ்ஸிமவுத்தில் 16.1°C வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.

இந்த வெப்பமான வானிலை, பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும் வசந்தகால சம இரவுப் பகலுடன் (spring equilux) ஒத்துப்போகிறது, இது ஒளியை விட இருள் அதிகமாக இருக்கும் நிலையின் முடிவைக் குறிக்கிறது.

மேலும், பெரும்பாலான பகுதிகளில் வானிலை பெரும்பாலும் வறட்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பகலில் வெப்பம் அதிகரித்தாலும், வாரத்தின் பிற்பகுதியில் இரவு நேரங்களில் பனிமூட்டமும் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!