தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அவரது மாநிலத்தில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் தேசத்துரோகத் தடைச் சட்டத்தின்படி மாநிலத் தேர்தல் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
முன்னாள் அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் 2021-ம் ஆண்டு அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் கலவரம் ஏற்பட்டது என்று மாநில அரசு கூறுகிறது.
இதனால், வரும் அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில், டிரம்ப் மாநிலத்தில் ஓட்டு கேட்கும் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கொலராடோ மாநில சுப்ரீம் கோர்ட்டும் டிரம்பை முதன்மைத் தேர்தலில் இருந்து விலக்கும் முடிவை எடுத்தது.
எனினும், இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக டிரம்ப் தரப்பு அறிவித்துள்ளது.