துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாதிப்பு!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தப்பியவர்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடாரங்களிலும் கொள்கலன்களிலும் வசித்துவந்த 14 பேர் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. துருக்கியில் மே மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) கடும் நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.
துருக்கியில் 48,000க்கும் மேற்பட்டோரும் சிரியாவில் 6,000க்கும் அதிகமானோரும் கடந்த மாதம் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் பாதிக்கப்பட்ட வட்டாரங்களை எர்துவான் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓராண்டுக்குள் சீரமைத்துக்கொடுக்க அவர் உறுதிகூறினார்.
ஆனால் பேரிடர் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளை எர்துவானின் அரசாங்கம் முறையாகக் கையாளவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்துள்ளன.