தடையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்த பிரித்தானிய நிறுவனம் ! அம்பலமான உண்மை
ரித்தானிய நிறுவனமொன்று தடையை மீறி ரஷ்யாவிற்கு பில்லியன் கணக்கில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றது அம்பலமாகியள்ளது.
உக்ரைன் மீதான மாஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பிரித்தானிய நிறுவனமொன்று சுமார் $1.2 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 38,104 கோடி) மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ரஷ்யாவிற்குள் விற்பனை செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹவாய், இன்டெல், ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளால் தயாரிக்கப்பட்ட சர்வர்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி பாகங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை அனுப்பியதாக Mykines Corporation LLP என்ற நிறுவனத்தை ரஷ்ய பதிவுகள் பட்டியலிட்டுள்ளன.அனுப்பப்பட்ட பொருட்களில் உயர்தர மைக்ரோசிப்கள், டெலிகாம் உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தக்கூடிய சர்வர்கள் ஆகியவையும் அடங்கும்.
சுங்கத் தாக்கல்களின்படி, நிறுவனம் அனுப்பிய பட்டியலிடப்பட்ட பொருட்களில் குறைந்தபட்சம் 982 மில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள், ரஷ்யா மீதான பிரித்தானிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பது தெரியவந்துள்ளது.உக்ரைன் படையெடுப்பிற்கு முன்னர் Mykines நிறுவனம் ரஷ்யாவில் செயலில் இருந்தது, ஆனால் வர்த்தக பதிவுகளின்படி போர் தொடங்கிய பின்னரே அதன் வணிகம் திடீரென தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்த பொருட்களை ரஷ்யாவிற்கு அனுப்புவது, மூன்றாம் நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்தாலும் பொருளாதாரத் தடைகளை மீறுவதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.பிப்ரவரி 2022 உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உட்பட பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்தன.இதில் ஆச்சரியமளிக்கும் மற்றோரு தகவல் என்னெவென்றால், மைக்கின்ஸின் உரிமையாளர் விட்டலி பொலியாகோவ் (53) உக்ரைனில் வசிப்பவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேனிய ஓப்பன் சோர்ஸ் புலனாய்வுக் குழுவான மோல்ஃபாரின் கூற்றுப்படி, விட்டலி பொலியாகோவ் என்று ஆராய்ந்தபோது, ஒருவர் மட்டுமே பொருந்துகிறார்: அவர் உக்ரேனிய மாநில சுரங்க நிறுவனத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர் என்று காட்டுகிறது.