டிட்வா புயல் – உலக வங்கியிடமிருந்து $120 மில்லியன் நிதியுதவி
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு உலக வங்கி குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த பேரிடரை எதிர்கொண்டு இலங்கையர்கள் காட்டிய மீள்தன்மை மற்றும் உயிர்களை காப்பாற்றவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் கோரிக்கையை தொடர்ந்து, உலக வங்கி குழு 120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்குகிறது.
இந்த நிதி, நடப்பு உலக வங்கி திட்டங்களில் இருந்து மீளபயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத.
இந்த உதவி மூலம், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகள் மீட்டெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, உலக வங்கி குழுமத்தின் தனியார் துறை பிரிவான IFC, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதார மீட்சியை வேகப்படுத்தவும் விவசாயம், உற்பத்தி மற்றும் தளவாடத் துறைகளில் முதலீடு மற்றும் ஆலோசனை ஆதரவை தொடரும் என அறிவித்துள்ளது.





