டயானா கமகே தனது எம்பி பதவியை இழந்தார் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான டயானா கமகே பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ளார் என்ற உண்மைகள் விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், டயானா கமகே தனது இலங்கை குடியுரிமையை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறியுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதன்படி, அரசியலமைப்பின் 89ஆவது சரத்தின் கீழ், இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்த ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக செயற்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்ததுடன், திருமதி கமகேவுக்கு இலங்கை குடியுரிமை இருப்பது உறுதிப்படுத்தப்படாததால், அவர் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியானவர் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது.