ஜெர்மனியில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் 23 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்வதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
ஜெர்மனிய நாட்டில் மக்கள் சனத்தொகையானது 83 மில்லியன் ஆகும்.
அதாவது இந்த 83 மில்லியன் சனத்தொகையின் 25 சதவீதமானவர்கள் அதாவது 23 மில்லியன் மக்கள் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
தற்பொழுது ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்களில் 40 சதவீதமான குடியேற்றம் நடைபெற்று உள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் இவ்வாறு ஜெர்மன் நாட்டில் குடியேறியவர்களில் கூடுதலாக இளைஞர் யுவதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த இளைஞர் யுவதிகளின் சராசரி வயதானது 29.9 ஆக உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இதேவேளை, இலங்கை இந்திய நாட்டவர்கள் பாரிய அளவில் ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் பலர் ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் இந்தியவர்களும் பாரிய அளவில் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
புலம்பெயர்பவர்களுக்கு சிறந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி உள்ளமை குறிப்பிடதத்க்கது.