ஜெர்மனியில் நீதிமன்றத்தின் உத்தரவு – 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பெண்
ஜெர்மனியில் இடது சாரி பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டணை விதித்து இருக்கின்றது.
இதனால் ஜெர்மனியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்றானது இடதுசாரி தீவிரவாத பெண் ஒருவருக்கு அவரது நடவடிக்கைகளின் காரணமாக 5 வருட சிறை தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பல இடதுசாரி சிந்தனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சில வன்முறைகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பேர்ளினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மாநில இடது சாரி கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸார் மீது வன்முறையை மேற்கொண்டுள்ளார்.
அதன் காரணத்தினால் இவர் சிறிது நேரம் கைது செய்யபட்டதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது இவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணத்தினால் பொலிஸார் இவரை தற்காலிகமாக கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.