ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடும் நெருக்கடி நிலை – சிறுவர்களுக்கு அறிமுகமாகும் நிதி உதவி

ஜெர்மனியில் சிறுவர்களின் வறுமையை ஒழிக்கும் வகையில் சிறுவர்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

மேலும் வறுமையில் வாழும் சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

ஜெர்மனியின் குடும்ப நல அமைச்சர் ஈசாக் பவுஸ் அவர்கள் சிறுவர்களுடைய வறுமையை நீக்குவதற்காக எதிர் காலத்தில் கிண்ட குர்சிகர் என்று சொல்லப்படுகின்ற புதியதொரு நடைமுறையை கையாள வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை ஒன்றை  முன்வைத்திருந்தார்.

தற்பொழுது இந்த விடயமானது பாராளுமன்றத்தில் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது ஜெர்மனியின் தற்போதைய நிதி அமைச்சரான கிறிஸ்டியான் லின் அவர்கள் இதுக்குரிய நிதியமான 12 பில்லியன் யுரோக்களை முதலீடு செய்வதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

இதன் காரணத்தினால் பல தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புக்கள் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஓலா சொலஸ் அவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் அவர்கள் மன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருக்கின்றனர்.

அதேவேளையில் இவர்களுடைய கருத்து தொடர்பில் கூடுதலான வருமானம் உள்ளவர்கள் மாதாந்தம் தங்களது குழந்தைகளுக்காக தாங்கள் செலவிடுவதாக 354 யுரோக்களை வருமான வரி இலாகாவில் இருந்து மீள பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் வறுமையில் வாழுகின்ற சிறுவர்கள் 250 யுரோக்களை மட்டுமே கிண்ட கில்ட் என்று சொல்லப்படுகின்ற பணமாக பெற்று கொள்வது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விடயம் என கருதப்படுகின்றது.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி