ஜெர்மனியில் அதிகரிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் – வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் ஓய்வு ஊதியம் அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் கடந்த ஆண்டு ஓய்வு ஊதியத்திற்கு வழங்கப்பட்ட தொகைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் வருகின்ற கோடை காலத்தில் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு 4.9 சதவீதமான ஓய்வு ஊதிய உயர்ச்சி மேற்கு ஜெர்மனியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளையில் கிழக்கு ஜெர்மனியில் 5.86 சதவீதமான ஓய்வு ஊதியம் உயர்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு ஜெர்மனி தொழில் அமைச்சர் வுபேட்டிஸ் ஐல் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
தற்பொழுது ஜெர்மனியில் 21 மி்ல்லியன் மக்கள் ஓய்வு ஊதியம் பெறுவதாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் தொழில் அமைச்சர் வுபேட்டிஸ் ஐல் அவர்கள் வெகுவிரைவில் கனடாவிற்கு செல்ல இருக்கின்றார்.
கனடாவில் ஏற்கனவே வெளிநாட்டு பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கனடாவிற்கு உள்வாங்குவதற்காக பொயின்ட் சிஸ்டம் என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் மக்கள் அந்த நாட்டிற்கு அழைப்பது வழமையாகும்.
இவ்வகையான திட்டத்தை ஜெர்மன் நாட்டிலும் அவர் அமுல்படுத்துவதற்காக இது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்வதற்காக இவர் கனடாவிற்கு செல்வதற்கு முதல் இந்த தகவலை அவர் வெளியிட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.