ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 7 பேரை கொன்ற துப்பாக்கிதாரி – வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

ஜெர்மனியில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இரவு ஜேயோவா வழிப்பாட்டு தளத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 7 பேர் மரணித்த நிலையில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 9 ஆம் திகதி ஹம்போக்கில் அமைந்திருந்த ஜேயோவாவின் சாட்சியம் என்று சொல்லப்படுகின்ற  கிறிஸ்த்தவ மத பிரிவினர் ஒருவருடைய தேவாலயத்தில் வழிபாடு நடைப்பெற்றுக்கொண்டிருந்த பொழுது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த மத பிரிவில் முன்பு உறுப்பினராக இருந்த பிலிப் என்று சொல்லப்படுகின்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என தெரிய வந்திருக்கின்றது.

அதேவேளையில் இவரது இந்த துப்பாக்கி சம்பவத்தில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிலிப் என்று சொல்லப்படுகின்ற நபரானவர் மெப்பிங் என்ற சொல்லப்படுகின்ற நகரத்தில் முன்பு வாழ்ந்தார் என்றும் பின்னர் பையன் மாநிலத்திற்கு சென்ற நிலையில் பின்னர் பையன் மாநிலத்தில் இருந்து அம்பக்கு குடிபெயர்ந்தார் என்றும் தெரிய வந்திருக்கின்றது.

இவர் முன்பு இந்த சமய பிரிவில் உறுப்பினராக இருந்த நிலையில் அண்மை காலத்தில் கடவுளும் சாத்தானும் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டும் உள்ளார்

இவர் ஆயுதங்களை கையாள்வதற்கு மற்றும் ஆயுதங்களை வைத்திருப்பதற்குரிய அனுமதி பத்திரத்தை வைத்திருந்தார் என்றும் தெரியவந்திருக்கின்றது.

இவர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பொழுது 3 தடவைகள் துப்பாக்கி சூட்டை நடத்திய நிலையில 3 தடவைகளும் பல குண்டுகள் சீறி பாய்ந்ததாகவும் தெரியவந்திருக்கின்றது.

பின்னர் இந்த துப்பாக்கி தாரியானவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகவும் தற்பொழுது சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளையில் அம்பக் நகர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!