குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை!
குமரிக்கடல் பகுதிகளில் மார்ச் 4, 5ஆம் திகதிகளில், மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3ஆம் திகதிகளில், வறண்ட வானிலை காணப்படும்.
மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)