குன்றத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டம்
குன்றத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வட்டார அளவில் 45 ஆயிரம் செடிகள் வளர்க்கும் பண்ணை உள்ளது.
இதில் பாதாம், முருங்கை, அகத்தி, எட்டி பூவரசு, பப்பாளி, கொய்யா போன்ற ஒன்பது வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இதனை முதன்மை செயலாளர் இறையன்பு, தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அமுதா உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் கரசங்கால் ஊராட்சியில் உள்ள சமுத்தவபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று குடியிருப்பு வீடுகளில் நடைபெற்றுள்ள பழுது பார்க்கும் பணிகளை பார்வையிட்டடார்
30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தொட்டியை புதுப்பித்தல் பணி
சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் சிமென்ட் கான்கிரீட் நடைபாதை அமைத்தல் பணி
சமுத்துவபுரத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம் புதுப்பித்தல்
பள்ளிக் கட்டிடம் சீரமைப்பு
சமத்துவபுரத்தில் ஆர்ச் சீரமைப்பு
சமத்துவபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை புதுப்பித்தல் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இதனை தொடர்ந்து சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஊர் புற நூலகம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் பல்வேறு வகையான செடிகளை பார்வையிட்டார்,
இதையடுத்து செரப்பணஞ்சேரி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடம், மற்றும்
ஆரம்பாக்கம் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பொதுமக்களிடம் குடிநீரின் தரம், மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வைப்பூர் ஊராட்சியில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி , குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.