கிரெம்ளின் மீதான விமர்சனம் : டெலிகிராம் செய்தி நிறுவுனருக்கு சிறை தண்டனை விதிப்பு!
கிரெம்ளினின் ஆயுதப் படைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டி, டெலிகிராம் செய்தி நிறுவன நிறுவுனருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரஷ்ய வலைப்பதிவாளர் டிமிட்ரி இவானோவ் என்பவருக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷ்யா ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வருகிறது.
உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலை தாக்குதல், படையெடுப்பு அல்லது போர்ப் பிரகடனம் என்று வர்ணிப்பதை கிரெம்ளின் ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)