கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்!
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று முதல் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளன.
இன்று முதல் வழமை போன்று கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடம்பெறும் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, கண் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ப்ரெட்னிசோலோன் எனப்படும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)