ஓமனில் இலங்கையர்களை அச்சுறுத்திய ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்
ஓமானில் வேலை பெற்றுத்தருவதாக என்று கூறி மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஏமாற்று சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுவெல பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ முத்திரையை போலியாக தயாரித்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஒருவரிடம் இருந்து 500,000 ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு சுற்றுலா விசாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓமனுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் நபர்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வீட்டில் பல மாதங்களாக கடத்தல்காரரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடத்தல்காரர் தற்போது ஓமானில் தங்கியிருப்பதுடன், பிடிபட்ட நபர்கள் விசா காலத்தை நீட்டித்து அல்லது வேலை கேட்டபோது சம்பந்தப்பட்ட நபரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முத்திரையை போலியாக தயாரித்து பெண் ஒருவரை சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அனுப்பிய போது, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.