ஐரோப்பாவில் கார் பந்தயத்தில் சாதனை படைத்த நடிகர் அஜித்குமார்
இத்தாலியில் நடைபெற்ற 12H கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அஜித் திரைத்துறையில் மட்டுமல்லாது கார் பந்தயத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
அதனைத் தொடர்ந்து போர்த்துகலில் நடைபெற்ற போட்டியிலும் பங்கேற்றது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
(Visited 39 times, 1 visits today)





