ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்!

ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை உக்ரைன் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதத்தில் உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களின் காரணமாக ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஏற்றுமதிகள் ஆரம்பித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ ரஷ்யா எங்கள் எரிசக்தி அமைப்பை அழிப்பதில் வெற்றிப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதிகள் தொடங்கினாலும், உள்நாட்டு மக்களுக்கு மின்சாரம் வழங்குவது நாட்டின் முன்னுரிமையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு எங்களிடம் இருந்த ஏற்றுமதி அளவை எட்டுவோம் என்று நம்புவதாக தெரிவித்த அவர், ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேநேரம் உக்ரைன் மற்றும் போலந்து இடையே எல்லை தாண்டிய போக்குவரத்தை அதிகரிக்க தற்போது திட்டங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி