எல் சால்வடாரில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றம்!
எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், 40 ஆயிரம் பேரை அடைக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது.அதன்படி கடந்த மாதம் 25ம் திகதி அந்த சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் கைதிகளுக்கு மொட்டையடிக்கப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)